1. Home
  2. தமிழ்நாடு

உலகப் புகழ் பெற்ற பிரிட்டன் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் காலமானார்!

உலகப் புகழ் பெற்ற பிரிட்டன் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் காலமானார்!

உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளரும் புக்கர் பரிசு பெற்றவருமான ஹிலாரி மாண்டல் காலமானார். இவருக்கு வயது 70

புகழ்பெற்ற எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் இரண்டு முறை புக்கர் பரிசை வென்றவர். அவர் எழுதிய புகழ்பெற்ற நாவலான 'வோல்ப் ஹால்' மற்றும் அதன் தொடர்ச்சியான 'பிரிங் அப் தி பாடி' நாவலுக்காக புக்கர் பரிசை வென்றவர். அவர் எழுதிய 'தி டிரையாலஜி மிரர்' மற்றும் 'தி லைட் ஆகியவை 2020இல் வெளியிடப்பட்ட உடனேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையான புத்தகங்களாகும்.

அவர் எழுதிய புகழ்பெற்ற நாவலான 'வோல்ப் ஹால்' புத்தகம் 40க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இப்புத்தகம் உலகம் முழுவதும் 50 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளது. அவர் 17 புத்தகங்களை எழுதியுள்ளார். அவரது வாசகர்களிடமிருந்து அளவுக்கரிய பாராட்டைப் பெற்றவர் ஆவார்.

உலகப் புகழ் பெற்ற பிரிட்டன் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் காலமானார்!


அவர் 1952 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள டெர்பிஷையரில் உள்ள க்ளோசாப்பில் பிறந்தார். அவர் தனது 20வது வயதில்பெண் இனப்பெருக்க உறுப்பு சம்பந்தப்பட்ட நோயான எண்டோமெட்ரியோசிஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். அதன் காரணமாக அவர் தனது 27 வயதில் அறுவைசிகிச்சை செய்து, மாதவிடாய் நிறுத்தத்திற்கு உட்படுத்த வேண்டியிருந்தது. இதனால் அவரால் குழந்தைகளைப் பெற முடியவில்லை. சிறிய விஷயங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது, அதேவேளையில், முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் அபாயகரமான முடிவுகளை எடுப்பது என் வாழ்க்கையை வரையறுத்தன என்று ஒரு பேட்டியில் கூறி உள்ளார்.

இது குறித்து அவரது வெளியீட்டாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

4வது எஸ்டேட் புக்ஸ் கூறுகையில், " எங்கள் அன்பான எழுத்தாளர் டேம் ஹிலாரி மாண்டலின் மரணத்தால் நாங்கள் மனம் உடைந்துள்ளோம். மேலும், அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், குறிப்பாக அவரது கணவர் ஜெரால்ட்ருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.




Trending News

Latest News

You May Like