சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சிப்ஸ் வாங்கிக் கொடுத்த உறவினர்!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சிப்ஸ் வாங்கிக் கொடுத்த உறவினர்!!
X

சிறுமியை உறவினர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, யாரிடமும் சொல்லக்கூடாது என்பதற்காக 100 ரூபாயும், சிப்ஸ் பாக்கெட்டும் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் துப்ரி பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியின் வீட்டிற்கு, உறவினர்கள் அவ்வப்போது வருவது வழக்கம். சம்பவத்தன்று சிறுமியின் தாயாருக்கு சகோதரர் முறையான உறவினர் ஒருவர் (31), சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து செல்ல கேட்டுள்ளார், தாயும் அதற்கு சம்மதித்துள்ளார்.

சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்ற சிறுமியின் மாமா, பொருட்கள், சாக்லேட் என வாங்கி கொடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை யாரிடமும் சொல்லக்கூடாது என அவருக்கு ரூ.100 கொடுத்தும், சிப்ஸ் பாக்கெட் வாங்கி கொடுத்தும் அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து வீட்டிற்கு சிப்ஸ் பாக்கெட்டுடன் வந்த சிறுமி தாயிடம் வயிறு வலிக்கிறது என்று அழுதுகொண்டே கூறியுள்ளார். இதையடுத்து விசாரிக்கையில் சிறுமி தனக்கு நடந்ததை தாயிடம் கூறியுள்ளார்.

இதைக்கேட்டதும் அதிர்ந்து போன தாய், அவரது சில உறவினர்களை கூட்டி சென்று அந்த நபர் வீட்டிற்கு சென்று சண்டையிட்டுள்ளார். மேலும் புகார் அளிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த அந்த நபர், புகார் அளித்தால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது குற்றம் உறுதியானது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

newstm.in

Next Story
Share it