நடிகர் விஜய்சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு!!

நடிகர் விஜய்சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு!!
X

பெங்களூர் விமான நிலையத்தில் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் மகா காந்தி ஆகிய இருவரும் பரஸ்பரம் தாக்கி கொண்டதாக கூறப்படும் விவகாரத்தில், விஜய் சேதுபதி மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டுமென மகா காந்தி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

தாம் விஜய் சேதுபதியை நலம் மட்டுமே விசாரித்ததாகவும், ஆனால் விஜய் சேதுபதி தன்னை சாதி பெயர் கூறி இழிவாக பேசியதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த மனு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக விஜய் சேதுபதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. சம்மனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி மேல்முறையீடு செய்திருந்தார்.

அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், பெங்களூருவில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதால் அந்த தாக்குதல் புகாரை குற்றவியல் புகாரின் கீழ் சென்னையில் விசாரிக்க வரம்பு இல்லை எனக்கூறி ரத்து செய்தது.

அதேவேளையில் அவதூறு வழக்கை சைதப்பேட்டை நீதிமன்றம் விசாரிக்கலாம் எனவும் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

newstm.in

Next Story
Share it