பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்..!

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்..!
X

பார்த்திபன் நடித்த 'குண்டக்க மண்டக்க' திரைப்பபடத்தின் இயக்குநர் எஸ்.அசோகன், மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 64.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.அசோகன். இவர், 'தமிழச்சி', 'பொன்விழா', பார்த்திபன் நடித்த 'குண்டக்க மண்டக்க' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.


இந்நிலையில், சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகரில் வசித்து வந்த எஸ்.அசோகன், மாரடைப்பால் இன்று காலமானார். அவரது உடல், சொந்த ஊரான உள்ளிக்கோட்டை தெற்கு தெரு இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இன்றிரவு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

அசோகனுக்கு ராஜலெட்சுமி என்ற மனைவியும் பகவத் கீதன் என்ற மகனும் உள்ளனர். இயக்குநர் எஸ்.அசோகன் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Next Story
Share it