ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது..?: தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு..!

ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது..?: தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு..!
X

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-க்கான தேர்வு அக்டோபர் 14 முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி வெளியிட்டது. இதற்கான, விண்ணப்பங்கள் 14.03.2022 முதல் 26.04.2022 வரை பெறப்பட்டன.

இதனிடையே, ஆசிரியர் தகுதித் தேர்வின் தாள் 1-க்கான தேர்வு செப்டம்பர் 10 முதல்‌ 15 வரை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாகக் காரணங்களால் அந்தத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு தேதி பின்னர் வெளியிடப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் அறிவித்திருந்தது.


இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-க்கான தேர்வு அக்டோபர் 14 முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், தேர்வு கால அட்டவணை, அனுமதி சீட்டு வழங்கும் விவரம் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Next Story
Share it