1. Home
  2. தமிழ்நாடு

காங்கிரஸ் தலைவர் பதவி.. வெளியானது பரபரப்பு தகவல்..!

காங்கிரஸ் தலைவர் பதவி.. வெளியானது பரபரப்பு தகவல்..!

ராகுல் காந்தியே மீண்டும் காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்க வேண்டும் என்று கூறிவந்த அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதாக கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

'காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (செப்.24-ம் தேதி) முதல் 30-ம் தேதி வரை நடைபெறும். வேட்புமனு மீதான பரிசீலனையும், வேட்புமனுவை வாபஸ் பெறுவதும் அக்டோபர் 1 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஒன்றுக்கு மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பட்சத்தில், வாக்குப்பதிவு அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும். 19-ம் தேதி வாக்கு எண்ணப்படும்' என்று காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.


இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் யார் யார் போட்டியிடப் போகின்றனர் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ஆனாலும், சசி தரூர் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோரின் பெயர்கள் சுற்றி வருகின்றன.

தலைவர் பதவிக்கான பேச்சு தொடங்கியதில் இருந்தே, ராகுல் காந்தியே மீண்டும் காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்க வேண்டும் என்று கூறிவந்த அசோக் கெலாட், "காங்கிரசின் தலைவர் பதவிக்கு நான் தேவை என்று கட்சிக்காரர்கள் நினைத்தார்கள்; நான் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்" என்று கூறினார்.


இது, தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிடுவார் என்பதை உறுதிசெய்யும் விதமாகவே அமைந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதாக, அசோக் கெலாட் கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

இதுகுறித்து பேசிய அசோக் கெலாட், "நான் வேட்புமனு தாக்கல் செய்வேன். அதன்பிறகு அதற்கான வேலைகள் இருக்கும். பின்னர், தேர்தலும் நடத்தப்படலாம். ஆனால், இவை அனைத்தும் எதிர்காலத்தைப் பொறுத்தது.


குறிப்பாக, இங்கு யாரைப் பற்றியும் நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. மேலும், ராஜஸ்தானில் என்ன நிலைமை உருவாகிறது, காங்கிரஸ் மேலிடத்தின் முடிவு என்ன, ராஜஸ்தான் எம்.எல்.ஏ-க்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்ப்போம்" என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like