1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் வீடுகளுக்கான வாடகை அதிகரிப்பு..!!

சென்னையில் வீடுகளுக்கான வாடகை அதிகரிப்பு..!!

சென்னையில் சொகுசு வீடுகளுக்கான வாடகை அதிகரித்துள்ளது. சென்னை அண்ணா நகரில் சொகுசு வீடுகளுக்கான வாடகை தொகை 56000 ரூபாயில் இருந்து 63,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் கோட்டூர்புரத்தில் சொகுசு வீடுகளுக்கான வாடகை தொகை 74,000 ரூபாயில் இருந்து 84,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 14% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் வீடுகளுக்கான வாடகை அதிகரிப்பு..!!

அது மட்டுமல்ல பெங்களூர், ஹைதராபாத், மும்பை, உள்ளிட்ட பெரு நகரங்களில் சொகுசு வீடுகளுக்கான வாடகை உயர்த்தப்பட்டு வருகிறது. மும்பையில் வொர்லி பகுதியில் மட்டும் கடந்த 2 வருடங்களில் 18% வரை வாடகை உயர்ந்தபட்டுள்ளது. தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் சொகுசு வீடுகளுக்கான வாடகை 56,000 ரூபாயில் இருந்து 65,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே போல ஹைதராபாத்தில் 15% வீட்டு வாடகை உயர்ந்துள்ளது.

Trending News

Latest News

You May Like