தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு: அனுமதி வழங்கியது சென்னை ஐகோர்ட்..!

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு:  அனுமதி வழங்கியது சென்னை ஐகோர்ட்..!
X

தமிழகத்தில், 50-க்கும் அதிகமான இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அணிவகுப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஒன்பது நகரங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி உள்துறை மற்றும் டி.ஜி.பி.க்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால், எந்த முடிவும் எடுக்காததால், அனுமதி அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்பது இடங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மனு தாக்கல் செய்தனர்.


அந்த மனுக்களில், 'மற்ற மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இங்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவது இல்லை. ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தவே போலீசுக்கு அதிகாரம் உள்ளது. அனுமதி மறுக்க அதிகாரம் இல்லை' என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (செப்.22-ம் தேதி) நடைபெற்றது. அப்போது, தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.


மேலும், வரும் செப்டம்பர் 28-ம் தேதிக்குள் தமிழக காவல்துறை அனுமதி வழங்க வேண்டும். அதன் பின்னர் அணிவகுப்புக்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Next Story
Share it