தாம்பரம் திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!!

தாம்பரம் திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!!
X

தாம்பரம் திமுக எம்எல்ஏ மீது மறைமலைநகர் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. அவர் சிங்கப்பெருமாள் கோயில் அடுத்துள்ள மால்ரோசா புரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்றார்.

அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி அவர் மிரட்டல் விடுப்பது போன்ற வீடியோ வெளியானது. இந்த விவகாரம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், தனது நண்பரை சிலர் நிறுவனத்தில் அனுமதிக்கவில்லை. அவர்கள் நிறுவனத்திற்கு நேரில் சென்றேன். அவர்கள் பேசியதை கட் செய்துவிட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர் என்று கூறினார்.

எங்களை அனுமதிக்க மறுத்த சிலர் தகாத வார்த்தைகளால் பேசினார் என்று விளக்கமளித்துள்ளார். இந்த நிலையில் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் மறைமலைநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it