ஆவின் பாலில் ஈ இருந்த விவகாரம் – அதிரடி நடவடிக்கை!!

ஆவின் பாலில் ஈ இருந்த விவகாரம் – அதிரடி நடவடிக்கை!!
X

மதுரையில் ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்த விவகாரத்தில் ஆவின் உதவி மேலாளர் சிங்காரவேலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை பல்கலை நகர் ஆவின் பாலகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஆவின் மேஜிக் பால் பாக்கெட்டில் ஈ இருந்ததால் பாலை வாங்கிய நுகர்வோர் புகார் அளித்தார் இது தொடர்பான வீடியோ நேற்று இணையத்தில் வைரலானது.

பால் பாக்கெட்டில் ஈ இருப்பது குறித்த வீடியோ வெளியான நிலையில் காலி பால் பாக்கெட் சப்ளை செய்யும் பெங்களூரை சேர்ந்த ஒப்பந்த நிறுவனத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. பேக்கிங் செய்யும் போது தவறு நடந்திருக்கலாம் என்று நேற்று ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பாலை பாக்கெட்டில் அடைக்கும் போது பணியில் இருந்த ஆவின் உதவி மேலாளர் சிங்கார வேலனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் அவரை பணியிடை நீக்கம் செய்து மதுரை ஆவின் பொது மேலாளர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

Next Story
Share it