பிரபல நகைச்சுவை நடிகர் உணவகத்தில் திடீர் ரெய்டு..!

பிரபல நகைச்சுவை நடிகர் உணவகத்தில் திடீர் ரெய்டு..!
X

பிரபல நகைச்சுவை நடிகரான சூரி, மதுரையில் அம்மன் உணவகம் என்ற பெயரில் சொந்தமாக உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவகங்கள் மதுரையில் உள்ள தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது.

இந்நிலையில், மதுரையில் உள்ள நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகத்தில் வணிக வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கான கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் இந்த சோதனை நடந்துள்ளது.

மேலும், உணவகத்துக்கு மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஆவணங்கள் இல்லாதது பற்றியும் விசாரணை நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அம்மன் உணவகத்தின் மீதான புகார் தொடர்பாக 15 நாளில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் சூரிக்கு வணிகவரித்துறை உத்தரவிட்டுள்ளது.

Next Story
Share it