1. Home
  2. தமிழ்நாடு

பப்ஜி ரசிகர்களுக்கு குட் நியூஸ்..!! நாளை முதல் விளையாடலாம்..!

பப்ஜி ரசிகர்களுக்கு குட் நியூஸ்..!! நாளை முதல் விளையாடலாம்..!

தென் கொரிய நாட்டை சேர்ந்த கிரப்டன் நிறுவனத்துக்கு சொந்தமானது பப்ஜி. இந்த விளையாட்டு இந்தியாவில் குறுகிய காலத்திலேயே அதீத வரவேற்பை பெற்றது. இந்தியாவில் இ-ஸ்போர்ட்ஸ் துறை வளர்ச்சியில் பப்ஜிக்கு முக்கிய பங்கு உண்டு.

எனினும், இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்தபோது பல்வேறு சீன செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. அப்போது பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்திய அரசுடன் ஆலோசனை நடத்தி கிராப்டன் நிறுவனம் பிஜிஎம்ஐ என்ற பெயரில் மீண்டும் பப்ஜி விளையாட்டை வேறு வடிவில் அறிமுகப்படுத்தியது.

இந்த விளையாட்டை உருவாக்கிய கிராப்டன் நிறுவனம், “மே 29 முதல் இந்தியாவில் மீண்டும் இந்த விளையாட்டை விளையாடலாம்” என்று தெரிவித்துள்ளது. இந்த பிஜிஎம்ஐ விளையாட்டிற்கு இந்திய அரசாங்கம் 3 மாத காலம் கெடு விதித்துள்ளது. இந்த மூன்று மாதங்கள் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் இந்திய அரசங்கத்தால் நேரடியாக கண்காணிக்கப்படும். அதன் பிறகு அதை தொடர்ந்து அனுமதிக்கலாமா? என்ற முடிவை அரசாங்கம் எடுக்கும்.


பப்ஜி ரசிகர்களுக்கு குட் நியூஸ்..!! நாளை முதல் விளையாடலாம்..!

ஐ.ஓ.எஸ் பயனர்கள் இப்போதே Preload செய்யலாம். இந்த கேம் மே 29 முதல் வெளியானதும் விளையாட தொடங்கலாம். இந்த மாதம் தொடக்கத்தில் விரைவில் BGMI இந்தியாவில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த கேம் இம்மாதமே வெளியாகும் என்பதால் அதன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Trending News

Latest News

You May Like