1. Home
  2. தமிழ்நாடு

செங்கோல் சரியான இடத்திற்கு வந்துள்ளது – இளையராஜா!!

செங்கோல் சரியான இடத்திற்கு வந்துள்ளது – இளையராஜா!!

புதிய நாடாளுமன்றம் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், செங்கோல் சரியான இடத்திற்கு வந்துள்ளது என்று இசைஞானி இளையராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நாளை புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் திறந்து வைக்கின்றனர். இரண்டு கட்டங்களாக நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நிகழ்வுகள் நடைபெறும் என மக்களவை செயலகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

விழாவின் முதல் பகுதியாக, காலை 7 மணி முதல் 9 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அருகே மத சடங்குகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

அதில் நாடு முழுவதிலும் இருந்து வரவழைக்கப்பட்ட 40 மத குருக்கள் பங்கேற்கவுள்ளனர். பின்னர் நாடாளுமன்ற திறப்பு விழா நடைபெற உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.


செங்கோல் சரியான இடத்திற்கு வந்துள்ளது – இளையராஜா!!

இந்நிலையில் இளையராஜா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், குடிமகனாகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழாவை மகிழ்ச்சியுடனுடம் ஆவலுடனும் எதிர்பார்த்து காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த குறுகிய காலத்தில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த கட்டிடத்தை கட்டிமுடிக்க துணைபுரிந்த பிரதமர் மோடி, மத்திய அரசு உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என அவர் தெரிவித்துள்ளார்.

அரச குடும்பத்தினர் செங்கோலை நீதி, ஒழுக்கம், நேர்மை மற்றும் நெறிமுறைகளின் அடையாளமாக போற்றினர். இத்தகைய செங்கோல் சரியான இடத்துக்கு திரும்ப வந்திருப்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.



newstm.in

Trending News

Latest News

You May Like

News Hub