அண்ணாமலையுடன் விவாதிக்கத் தயார் – அமைச்சர் சவால்!!
![அண்ணாமலையுடன் விவாதிக்கத் தயார் – அமைச்சர் சவால்!!](https://newstm.in/static/c1e/client/106785/migrated/a13455d9873e417696c2b204104e49f8.webp?width=836&height=470&resizemode=4)
தமிழ் வளர்ச்சி, மும்மொழி கொள்கை குறித்து அண்ணாமலையுடன் விவாதிக்கத் தயார் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட பின்னர் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ் வளர்ச்சி, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றிக்கு யார் காரணம் என பேச தயாராக இருக்கிறேன், சென்னையில் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் அண்ணாமலையுடன் விவாதிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
![அண்ணாமலையுடன் விவாதிக்கத் தயார் – அமைச்சர் சவால்!!](https://newstm.in/static/c1e/client/106785/migrated/bc413a1007210c9ed4dd1c9715b16fb6.webp)
அண்ணாமலைக்கு வரலாறும் தெரியவில்லை. நடப்பு நிகழ்வு தெரியவில்லை. அரசாங்கத்திற்கு தெரியாமல் நடந்து விட்டதா என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். அரசுக்கு தெரியாமல் என்னென்னவோ நடக்கிறது.
குறிப்பாக ஊட்டியில் துணைவேந்தர்களை அழைத்து புதிய கல்வி கொள்கை குறித்து பேசுவதற்காக ஜூன் மாதம் 5ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என்று ஆளுசர் சார்பில் சுற்றறிக்கை சென்றுள்ளது.
![அண்ணாமலையுடன் விவாதிக்கத் தயார் – அமைச்சர் சவால்!!](https://newstm.in/static/c1e/client/106785/migrated/8984ee0727fe1ad66999c94b882e7a2c.webp)
நான் இணை வேந்தர் எனக்கு அதுகுறித்து தெரியவில்லை. ஆனால் இதுகுறித்து அண்ணாமலைக்கு தெரிந்திருக்கும். ஏனென்றால் அவர் ஆளுநருக்கு நெருக்கமாக உள்ளார். இது குறித்து அரசுக்கும் தெரியவில்லை. செயலாளருக்கும் தெரியவில்லை.
குறிப்பாக உயர்கல்வித்துறையை பொருத்தவரையில் அரசுக்கு தெரியாமல்தான் எல்லாம் நடக்கிறது என்றார். உண்மையில் பாஜகவினருக்கு தமிழர்கள் மீதும், தமிழ் மீதும் அக்கறை கிடையாது.
இந்த ஜனநாயகம் மாண்பை ஒழித்துவிட்டு ஒற்றை ஆட்சியை கொண்டுவர வேண்டும் என செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனுடைய நோக்கம் தான் இந்த தேசிய கல்விக் கொள்கை என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
newstm.in