பிரபல நடிகையிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா! ஏன் தெரியுமா?
![பிரபல நடிகையிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா! ஏன் தெரியுமா?](https://newstm.in/static/c1e/client/106785/migrated/0d0eb23a74764247d315518eb4889bd3.webp?width=836&height=470&resizemode=4)
பிரபல நடிகையிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநரான எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக கலக்கி வருகிறார். நண்பன், இறைவி, மெர்சல் படங்களில் இவரது நடிப்பு அனைவரையும் ரசிக்க வைத்தது. அதிலும் மாநாடு படம் பெரிய வரவேற்பை பெற்றது.
Also Read - செட் தகுதித்தேர்வு மார்ச் 6-ம் தேதி நடைபெறும்..!
![பிரபல நடிகையிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா! ஏன் தெரியுமா?](https://newstm.in/static/c1e/client/106785/migrated/bc1dd44fc5167639fc59a86e43d93152.webp)
இந்த படம் சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றியை எப்படிக் கொடுத்ததோ, அதேபோல் எஸ்.ஜே. சூரியாவின் நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது. இவரது நடிப்பை ரசிகர்கள் மட்டுமல்லாது சக நடிகர்களே புகழ்ந்து பேசினர்.
அப்போது நடிகை வரலட்சுமி சரத்குமாரும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பைப் பாராட்டி ட்வீட் செய்திருந்தார். ஆனால் அந்த ட்வீட்டை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பார்த்துள்ளார்.
![பிரபல நடிகையிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா! ஏன் தெரியுமா?](https://newstm.in/static/c1e/client/106785/migrated/05b894bc6f099d7458cdec9f512e8848.webp)
இதையடுத்து, "நான் எப்படிப் பார்க்காமல் விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள். மிக்க நன்றி" என நடிகர் எஸ்.ஜே.சூர்யா ட்வீட் செய்துள்ளார். தற்போது இந்த ட்வீட் சினிமா ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
newstm.in