தோனி குறித்து சுனில் கவாஸ்கர் சர்ச்சை பேச்சு!!
பவுலர் விக்கெட் எடுத்தால் தோனிக்கு பாராட்டு கிடைக்கிறது, ஆனால் மும்பை கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கிடைப்பதில்லை என்று கவாஸ்கர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில், மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ அணியை வீழ்த்திய போட்டியில் இளம் வீரர் ஆகாஷ் மதிவால் 5 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு உதவினார்.
இப்போட்டி குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், ‘மதிவால் ஓவர் த விக்கெட்டிலிருந்து வந்து பதோனி விக்கெட்டை வீழ்த்தினார். ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து வந்து நிக்கோலஸ் பூரணின் விக்கெட்டை வீழ்த்தினார்.
மதிவால் இதை தோனியின் தலைமையின் கீழ் செய்திருந்தால், உலகமே அவரின் கேப்டன்சியை கொண்டாடியிருக்கும். ஆனால் ரோகித் ஷர்மாவை அப்படி யாரும் கூறவில்லை என்றார்.
துஷார் தேஷ்பாண்டே, அஜிங்கியா ரஹானே, ஷிவம் தூபே உள்ளிட்டோர்களின் திறமைகளை வெளிகொண்டு வந்ததற்காக தோனியை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடுகிறார்கள்.
மும்பை அணியில் வதேராவை ரோகித் சர்மா இம்பாக்ட் பிளேயராக பயன்படுத்தினார். இதை தோனி செய்திருந்தால் அவரின் உத்தியை எல்லோரும் பாராட்டுவார்கள். தோனிக்கு கிடைத்த அளவிற்கு ரோகித் சர்மாவிற்கு புகழ் கிடைக்கவில்லை என்றே கூறவேண்டும் என்றார்.
சுனில் கவாஸ்கரின் இந்த கருத்து பலரின் ஆதரவையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. ரோகித் ஷர்மா தோனி அளவுக்கு பொறுமையான கேப்டன் கிடையாது. ஆட்டத்தின் போக்குக்கு ஏற்ப செயல்படுவதில் தோனிக்கு நிகராக அவர் இல்லை என்று தோனி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
newstm.in