காதலிச்சு கர்பமாக்கி வேறொரு பெண்ணுடன் திருமணம்.. மணக்கோலத்தில் கைதான புதுமாப்பிள்ளை..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆர்.எஸ். மணி நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (31). இவர் மெக்கானிக்கா வேலை பார்த்து வருகிறார். இவரும், எல்.என்.புரம் பகுதியைச் சேர்ந்த ரம்யா (29) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதில் ரம்யா கர்ப்பம் அடைந்த நிலையில் கர்ப்பத்தை கலைத்தால் திருமணம் செய்து கொள்வதாக சுப்பிரமணி ஆசை வார்த்தை கூறி அதை கலைத்து உள்ளார்.

மேலும் கடந்த 22ம் தேதி விழுப்புரத்தில் உள்ள குலதெய்வ கோவிலில் வைத்து ரம்யாவை சுப்பிரமணி திருமணம் செய்து கொண்டார். பின்னர் விழுப்புரத்தில் அறை எடுத்து தங்கி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் சுப்ரமணியனுக்கு கடலூரைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் திடீரென நிச்சயம் செய்யப்பட்டு நேற்று காலை திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் திருமணம் நடக்க இருந்தது.
இதனை அறிந்த ரம்யா பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியனை தேடி வந்த நிலையில், திருமணத்தை தடுத்து நிறுத்த கோரி பண்ருட்டியில் இரவு முழுக்க காதலன் வீட்டு முன்பு வாசலில் அமர்ந்து ரம்யா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆனால் திருவத்திபுரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றதால் ஒவ்வொரு திருமணமாக சென்று அவரை தேடி வந்த நிலையில் அதற்குள் சுப்பிரமணிக்கு திருமணம் முடிந்து விட்டது. மணக்கோலத்தில் கோயிலில் இருந்து வெளியே வந்த சுப்பிரமணியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அதன்பிறகு அவரிடம் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.