1. Home
  2. தமிழ்நாடு

அமைச்சர் செஞ்சி மஸ்தான் சகோதரரின் பதவி பறிப்பு!!

அமைச்சர் செஞ்சி மஸ்தான் சகோதரரின் பதவி பறிப்பு!!

அமைச்சர் செஞ்சி மஸ்தான் சகோதரர் காஜாநஜீரின் பதவியை பறித்து திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

அண்மையில், திமுகவின் நெல்லை மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

அவருக்கு பதிலாக டி.பி.எம்.மைதீன்கான் நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அதே போல், மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மிசா பாண்டியன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.


அமைச்சர் செஞ்சி மஸ்தான் சகோதரரின் பதவி பறிப்பு!!

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக துரைமுருகன் அறிவித்தார்.

இந்நிலையில், திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டம், செஞ்சி பேரூர் செயலாளராக இருந்த காஜாநஜீரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக எம்.கார்த்தி செஞ்சி பேரூர் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

பதவி பறிக்கப்பட்ட காஜாநஜீர் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் உடன்பிறந்த சகோதரர் (தம்பி)என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like