பரவும் புதிய வகை கொரோனா… பீதியில் மக்கள்!!

புதிய வகை கொரோனாவால் வாரத்திற்கு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சீனா பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டுவித்தது. சீனாவில் தொடங்கினாலும் மற்ற நாடுகளில் பெரிய பாதிப்பு ஏற்பட்டதே தவிர, சீனாவில் அந்த அளவுக்கு பாதிப்பு இல்லை. தங்கள் நாட்டில் வைரஸை கட்டுப்படுத்திவிட்டதாக சீனா கூறியது.
ஆனால், சீனா உண்மையை மறைப்பதாக உலக நாடுகள் குற்றம்சாட்டின. இந்நிலையில், சீனாவுக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வீரியம் மிக்க புதிய வகை கொரோனா அலைக்கு சீனா தயாராகி வருவதாக மூத்த சுகாதார ஆலோசகர் தெரிவித்துள்ளார். இந்த புதிய கொரோனா அலை, ஜூன் மாத இறுதியில் உச்சத்தை எட்டக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்த வகை தொற்றால், நாட்டில் வாரத்திற்கு சுமார் 6 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலால் சீன மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் முதல் ஓமைக்ரான் வைரசின் புதிய மாறுபாட்டால், சீனாவில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து இம்மாத இறுதிக்குள் 4 கோடி பேரும், அடுத்த மாத இறுதிக்கும் வாரந்தோறும் 6 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in