1. Home
  2. தமிழ்நாடு

டிரெண்டிங்கில் இருக்கும் “செங்கோல்”!! யாருடையது? பின்னணி என்ன?

டிரெண்டிங்கில் இருக்கும் “செங்கோல்”!! யாருடையது? பின்னணி என்ன?

நாடு முழுவதும் தற்போது பேசு பொருளாக மாறியுள்ள செங்கோல் பற்றியும், அதனை வடிவமைத்தது யார், அதன் முக்கியத்துவம் என்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

மே 28ஆம் தேதி நாடாளுமன்ற புதிய கட்டடம் திறக்கப்பட உள்ள நிலையில், அதைத்தாண்டி தற்போது செங்கோல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது ஆட்சி செய்பவர்கள் காலம்காலமாக கையில் வைத்திருப்பது.

தமிழில் உள்ள செம்மை என்ற வார்த்தையில் இருந்து செங்கோல் உருவாகியுள்ளது. செம்மை என்றால் சிறப்பு என்று பொருள். செம்மையான கோலை வைத்து அல்லது சிறப்பான கோலை வைத்து ஆட்சி செய்ததாக பொருள்.

தமிழர் பண்பாட்டில் அங்கம் வகித்த இந்த செங்கோல் புதிய நாடாளுமன்றத்தை அலங்கரிக்க இருக்கிறது. ஆதினங்கள் இந்த செங்கோலை பிரதமர் நரேந்திர மோடியிடம் கொடுக்க உள்ளனர்.


டிரெண்டிங்கில் இருக்கும் “செங்கோல்”!! யாருடையது? பின்னணி என்ன?

செங்கோல் என்றால் என்ன?

செங்கோல் என்பது 5 அடி உயரத்தில் வெள்ளியில் செய்யப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்ட ஒரு உலோகம். அதன் தலைப்பகுதியில் நேர்த்தியான முறையில் செதுக்கப்பட்ட ஒரு நந்தி உள்ளது. இந்த செங்கோல் நீதியின் உருவாக பார்க்கப்படுகிறது.

இதை தயாரித்தது யார், எப்போது?

இது 1947ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சி அதிகாரத்தை இந்தியர்களிடம் கொடுத்துவிட்டு சென்ற போது தயாரிக்கப்பட்டது. சென்னையை சேர்ந்த உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் நிறுவனத்தினர் செங்கோலை தயாரித்தனர்.


டிரெண்டிங்கில் இருக்கும் “செங்கோல்”!! யாருடையது? பின்னணி என்ன?

எதற்காக செங்கோல் தயாரிக்கப்பட்டது?

கடைசி வைஸ்ராய் மவுண்ட் பேட்டன், ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு அதிகாரம் மாறுவதை தனித்துவமாக குறிப்பிட விரும்பினார். அவர், ஜவஹர்லால் நேருவிடம் இதுகுறித்து பேச, அவர் ராஜாஜியிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

பலகட்ட ஆய்வுக்கு பிறகு ராஜாஜி, தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த செங்கோலை ஆட்சி மாற்றத்திற்கு அடையாளமாக இந்திய பிரதிநிதியிடம் கொடுக்கலாம் என்று யோசனை கூறினார்.

இதையடுத்து, ராஜாஜி திருவாடுதுறை ஆதினத்திடம் செங்கோல் பற்றி கேட்க, அவர்கள் உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் நிறுவனத்திடம் செங்கோலை தயாரிக்கும்படி கூறினர்.

செங்கோலை கொடுத்தது யார்?

செங்கோல் தயாரிக்கப்பட்ட பிறகு, கங்கை நீரைக் கொண்டு அதற்கு பூஜை செய்தனர். பின்னர், 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு 7 மணிக்கு, ஜவஹர்லால் நேரு, தமிழ்நாட்டில் இருந்து செங்கோலை பெற்றுக் கொண்டதாக செய்தியாளர் சந்திப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

அப்போது மூத்த தலைவர்கள் உடன் இருந்ததாகவும், ஆட்சி மாற்றம் மற்றும் அதிகார மாற்றத்தை செங்கோலை பெற்று நேரு ஏற்றுக் கொண்டதாகவும் அமித்ஷா கூறினார். இது ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களுக்கு அதிகாரம் மாறியதை குறிப்பதாக சொல்லப்படுகிறது.


டிரெண்டிங்கில் இருக்கும் “செங்கோல்”!! யாருடையது? பின்னணி என்ன?

இன்று செங்கோல் எப்படி உள்ளது? அதன் மீதான பார்வை என்ன?

செங்கோல் இன்றளவும் செம்மையாக ஆட்சி செய்வதையே குறிக்கிறது. அது, இந்தியாவின் பன்முகத்தன்மையையும், சுதந்திரத்திற்கு பிறகு புதிய சேதம் பிறந்ததையும் நினைவுப்படுத்துகிறது.

தற்போது செங்கோல் எங்கு உள்ளது?

1947ஆம் ஆண்டு முதல் தற்போது வரை செங்கோல் அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.


டிரெண்டிங்கில் இருக்கும் “செங்கோல்”!! யாருடையது? பின்னணி என்ன?

கடந்த காலத்தில் செங்கோலின் முக்கியத்துவம் என்ன?

சோழர்கள் ஆட்சி செய்தபோது, ராஜாக்கள் கையில் செங்கோல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதுஒரு சம்பிரதாயமாகவும், அதிகாரத்தின் சின்னமாகவும் பார்க்கப்பட்டது. அது அதிகாரம் ஒருவரிடம் இருந்து அடுத்தவரிடம் மாறுவதையும் குறிக்கும். மேலும், செங்கோல் வைத்திருப்பவர் நீதி தவறாத ஆட்சியை வழங்குவார் என்றும் நம்பப்படுகிறது.

இன்று செங்கோல் புத்துயிர் பெற காரணம் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி செங்கோல் குறித்து வரலாற்றை படித்து தெரிந்து கொண்டதாகவும், அதனால் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் வைக்க வேண்டும் என்று கூறியதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.


டிரெண்டிங்கில் இருக்கும் “செங்கோல்”!! யாருடையது? பின்னணி என்ன?

புதிய நாடாளுமன்ற வளாகத்தை அதிகாரப்பூர்வமாக திறப்பதற்கு முன்பு பிரதமர் செங்கோலைப் பெற்றுக் கொண்டு, அதன்பிறகு சபாநாயகர் இருக்கையின் அருகில் வைப்பார் என்று கூறப்படுகிறது.

ஆட்சி மாற்றம் என்பது, ஆவணத்தில் கையெழுத்திடுவது மட்டுமல்ல என்று கூறியுள்ள அமித்ஷா, 1947ஆம் ஆண்டு செங்கோலை பெறும்போது, நேரு எவ்வாறு உணர்ந்தாரோ, அதேபோன்ற உணர்வு இப்போதும் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like