1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் இனி போக்குவரத்து மாற்றம் செய்தாலும் நெரிசல் இருக்காது - புதிய வசதி அறிமுகம்..!!

சென்னையில் இனி போக்குவரத்து மாற்றம் செய்தாலும் நெரிசல் இருக்காது - புதிய வசதி அறிமுகம்..!!

சென்னையில் பல்வேறு பணிகளுக்காக அடிக்கடி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. குறிப்பாக மெட்ரோ ரயில் பணிகள், மழை நீர் வடிகால் உள்ளிட்ட பணிகளுக்காக அடிக்கடி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இதற்கு மென்பொருள் மூலம் தீர்வு காண சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி 2 மென் பொருள்களை வாங்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமும் முடிவு செய்துள்ளது. இதன்படி, visum மற்றும் vissim என்ற மென் பொருள்களை வாங்க உள்ளது. இந்த மென் பொருள்கள் போக்குவரத்து சார்ந்த திட்டமிடலுக்கு பயன்படுத்தும் மென் பொருள்கள் ஆகும். முதல் கட்டமாக ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படும். இதனைத் தொடர்ந்து மெட்ரோ ரயில், போக்குவரத்து காவல் துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "போக்குவரத்து மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ள பகுதிகளில் எங்களது அதிகாரிகள் முதலில் ஆய்வு மேற்கொள்வார்கள். இந்த தகவல்கள் மென் பொருளில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த மென்பொருள் சிறந்த முறையில் போக்குவரத்து மாற்றம் செய்வதற்கான வழிமுறைகளை வழங்கும். இதன்படி எந்த வழியாக போக்குவரத்து மாற்றம் செய்தால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும் என்பதை முடிவு செய்வோம்." இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like