1. Home
  2. தமிழ்நாடு

ஆவின் பணியாளர்களுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு!!

ஆவின் பணியாளர்களுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு!!

ஆவின் பணியாளர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அதன்படி, பயோ மெட்ரிக் முறையில் பணியாளர்களின் வருகை பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும், பால் கொள்முதல் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பளம் அவரவர் வங்கி கணக்குகள் மூலம் மட்டுமே வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பால் பதப்படுத்துதல் பேக்கேஜிங் மற்றும் லோடிங் செய்யும் இடங்களிலும் பிரதான வாயிலிலும் சிசிடிவி கேரமா பொருத்த வேண்டும், அனைத்து போக்குவரத்து வாகனத்தின் நிலை, சுத்தம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.


ஆவின் பணியாளர்களுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு!!

தனியார் பால் நிறுவனங்கள் அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்வதும் அவற்றில் சர்க்கரை, யூரியா, ஸ்டார்ச் உள்ளிட்ட பல்வேறு வேதி பொருட்கள் கலப்படம் செய்து பாதுகாப்பு விதிகளை மீறி உரிய அனுமதியின்றி பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதை தடுக்க மாவட்ட ஆட்சி தலைவர்களின் உதவியுடன் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பால் பதப்படுத்துதல் மற்றும் கையாளுவதில் வரும் இழப்பை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு குறித்த நேரம் தவறாமல் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்.

ஆவின் அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவையான கணினி மற்றும் ICT பயிற்சிகளை உடனடியாக அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like