அதிர்ச்சி! கழிவறையில் சிறுமி பாலியல் வன்கொடுமை!!
மருத்துவமனை கழிவறையில் வைத்து இளைஞர் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மணியம் என்ற பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியின் சகோதரருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை பார்த்துக் கொள்ள அரசு மருத்துவமனையில் இருந்துள்ளார்.
அதே மருத்துவமனையில் பாலகொண்டா என்ற பகுதியை சேர்ந்த ஒருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை கவனித்து கொள்ள 23 வயது இளைஞர் வினோத் என்பவர் இருந்துள்ளார்.
இந்த சூழலில் சிறுமியிடம் வினோத் பேச்சு கொடுத்துள்ளார். சிறுமியும் அவருடன் பேசி நட்பாக பழகியுள்ளார். அப்போது சிறுமி தனது குடும்பம் வறுமையில் இருப்பதாக கூறவே, வினோத்தும் ஆறுதலாக பேசி வந்துள்ளார்.
இருவரும் தொலைபேசியிலும் நட்பை வளர்த்தனர். எனவே சிறுமி வினோத்தை முழுமையாக நம்பியுள்ளார். ஆனால் வினோத் சிறுமியிடம் தவறான நோக்கத்தில் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமி இரவு நேரத்தில் கழிவறை சென்றுள்ளார். இதனை கண்ட வினோத்தும், அவரது பின்னே சென்றுள்ளார். வினோத்தை கண்ட சிறுமி உடனே அங்கிருந்து போகுமாறு கத்தி கூறியுள்ளார்.
ஆனால் வினோத் அங்கிருந்து செல்லாமல், சிறுமியின் வாயில் துணியை வைத்து அடைத்து, கழிவறையிலேயே கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அங்கிருந்தவர்கள் வந்ததும் வினோத் தப்பிச் சென்றார். இதைத்தொடர்ந்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளி வினோத்தை தேடி வருகின்றனர்.
newstm.in