1. Home
  2. ஆரோக்கியம்

அசைவம் சாப்பிட்டபின் கோவிலுக்கு செல்லக்கூடாது ஏன் தெரியுமா?

அசைவம் சாப்பிட்டபின் கோவிலுக்கு செல்லக்கூடாது ஏன் தெரியுமா?

பொதுவாகவே உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உணவு அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவதும், உணவில் காரம் சேர்த்து சாப்பிட்டால் கோபம் வருவதும் இதற்கு உதாரணமாக கூறலாம்.

அசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அது உடலில் மந்தநிலையை ஏற்படுத்தும். கோவிலுக்குச் செல்லும்போது சுத்தமாகச் செல்ல வேண்டும் என்று கூறுவது உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் பொருந்தும்.

மனதளவில் மந்தநிலையில் உள்ள ஒருவர் சு ட்சும சக்திகள் நிலவும் கோவிலுக்குள் செல்லும்போது அந்த சக்திகளை உணரக்கூடிய ஆற்றலை இழந்து விடுகிறார். பொதுவாக அசைவ உணவுகள் சு ட்சும சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும் தன்மை படைத்தவை.எனவேதான், கோவிலுக்குச் செல்லும்போது எளிமையான உணவை மிதமான அளவில் உண்டு, மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும் என முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

ஒருவேளை அசைவ உணவைச் சாப்பிட்ட பின்னர் கோவிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், சாப்பிட்ட 3 அல்லது 4 மணி நேரத்திற்குப் பின்னர் குளித்துவிட்டு கோவிலுக்குச் செல்வது நல்லது.


Trending News

Latest News

You May Like