இறைச்சி சாப்பிட்ட கல்லூரி மாணவி பலி.. விக்கல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பொன்னாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேல். இவரது மனைவி ஜெயலட்சுமி (38). இந்த தம்பதிக்கு மஞ்சு என்ற அஸ்வினி (18) என்ற மகள் இருந்தார். இவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள டிப்ளமோ நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி வயலுக்குச் சென்ற ராஜவேல், வயல் சேற்றில் கிடந்த கொக்கு ஒன்றை எடுத்து வந்துள்ளார். பின்னர் அதை சமைத்து தனது மகளுக்கு கொடுத்துள்ளார். அதனை வாங்கி சாப்பிட்ட மஞ்சுக்கு திடீரென விக்கல் ஏற்பட்டுள்ளது.
நீண்ட நேரமாகியும் மஞ்சுக்கு விக்கல் நிற்காததால் அவரது உறவினர்கள் உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்வினி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் ஜெயலட்சுமி கீழ்கொடுங்காலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜூலு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.