குட் நியூஸ்..!! விரைவில் ஆவின் குடிநீர் அறிமுகம்..!!
தமிழ்நாடு அரசின் நிறுவனமான ஆவின் மூலம் பால், நெய், வெண்ணெய் என பல்வேறு பொருள்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.இந்த நிலையில் ஆவின் நிர்வாகம் குடிநீர் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆவின் தண்ணீர் பாட்டில்கள் சந்தை விலையை காட்டிலும் குறைவான விலைக்கு விற்கப்பட உள்ளன. எனினும் விலை பட்டியல் தற்போது வரை தயாராகவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த ஆவின் பாட்டில்கள் அரை லிட்டர், ஒரு லிட்டர் என பல்வேறு அளவுகளில் தயாரிக்கப்பட உள்ளது.இதற்கான அதிகாரப்பூர்வ விரைவில் வெளியாகவுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “ஆவினில் இனி வரும் காலங்களில் உறுதியாக மாற்றத்தை பார்ப்பீர்கள். ஆவின் தினசரி பால் கையாளும் திறனை 40 லட்சம் லிட்டரில் இருந்து 70 லட்சமாக உயர்த்த இந்த ஆண்டிற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் தண்ணீர் பாட்டில் திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
பால் உற்பத்தி கட்டமைப்பை பெருக்கும் விவசாயிகளுக்கு 2 லட்சம் கறவை மாடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கான கடன் வசதி, கால்நடையை பராமரிக்க தேவையான தீவனங்கள் ஆகியவை உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவார காலத்தில் ஆவின் பொருட்கள் தரம் உயர்த்தப்பட்டு இயற்கை முறையில் பொருட்கள் வழங்கப்படும். நான் இருக்கையில் அமர்ந்து ஒரு வார காலம் தான் ஆகிறது. ஒவ்வொன்றாக இனி செய்வேன். பால் உற்பத்தியாளர்களின் நலனை கருதியும், பால் உற்பத்தியை பெருக்கவும் கறவை மாடுகளுக்கு #காப்பீட்டு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். அனுமதி பெறாத பால் குளிரூட்டு நிலையங்கள் மற்றும் பால் விற்பனை நிலையங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.” எனக் கூறினார்.