1. Home
  2. தமிழ்நாடு

வனத்துறை சார்பில் யானைகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது..!!

வனத்துறை சார்பில் யானைகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது..!!

வனத்துறை சார்பில் யானைகள் கணக்கெடுப்புப் பணி அவ்வப்போது மேற்கொள்ளப்படும். அந்த வகையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய 4 மாநிலங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட யானைகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி, கூடலூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், மேகமலை, ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, தேனி, அம்பை, களக்காடு, கன்னியாகுமரி, நெல்லை, ஈரோடு, சத்தியமங்கலம், ஹசனூர், சேலம், தருமபுரி, ஓசூர், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கொடைக்கானல் என மொத்தம் 26 வனக் கோட்டங்கள் உள்ளன. அவற்றில் 699 பிரிவுகள்(Blocks) ஏற்படுத்தப்பட்டு இந்த யானைகள் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

வனத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், வேட்டை தடுப்புக் காவலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் அடங்கிய கணக்கெடுப்புப் பணிக் குழுவினருக்கு வனத்துறை நிபுணர்கள் மற்றும் உயிரியலாளர்கள் ஆகியோர் மூலம் போதிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு இந்த குழுவினர் களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like