பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு..!!
மதுரை மாவட்டம், திருவாதவூர் அருகே உள்ள இடையப்பட்டி கிராமத்தில் கோயில் கட்டிடக் கலை ஆய்வாளர் தேவி தலைமையிலான குழுவினர், அந்த கல்வெட்டைப் படியெடுத்து ஆய்வு செய்தனர். ஆய்வில் அந்த கல்வெட்டு மாறவர்மன் குலசேகரப் பாண்டியனின் 43- ஆம் ஆண்டு ஆட்சிக்கால கல்வெட்டு எனத் தெரிய வந்தது.
பிற்கால பாண்டியர் மன்னராக இருந்த மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் ஆட்சிக்காலம் குறித்த தகவல்களுடன் இந்த கல்வெட்டு இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த கல்வெட்டு, 1311- ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டதாகவும் முழு கல்வெட்டில் பாதி மட்டுமே இங்கு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
கால்வாய்க்கு அருகே பழமையான கல்வெட்டு இருப்பதாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், இந்த ஆய்வு நடைபெற்றதாக ஆய்வாளர் தேவி குறிப்பிட்டுள்ளார்.