1. Home
  2. தமிழ்நாடு

மிஸ் பண்ணிடாதீங்க!! இந்திய கடற்படையில் வேலை..!!

மிஸ் பண்ணிடாதீங்க!! இந்திய கடற்படையில் வேலை..!!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள Chargeman பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு என மொத்தம் 372 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணியின் பெயர்: Chargeman-II (redesignated as Chargeman)

காலி பணியிடங்கள்: 372

வயது வரம்பு:விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இயற்பியல் அல்லது வேதியியல் அல்லது கணிதத்துடன் அறிவியலில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது வாரியத்திடம் இருந்து பொருத்தமான துறையில் பொறியியல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்

தேர்வு செயல் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் Computer Based Exam மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.joinindiannavy.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் மே 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பதாரர்கள் (எஸ்சி/எஸ்டி/PwD/ESM தவிர) ஆன்லைனில் படிவத்தை பூர்த்தி செய்யும் போது விண்ணப்பக் கட்டணமாக ரூ.278 சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.05.2023

Trending News

Latest News

You May Like

News Hub