1. Home
  2. தமிழ்நாடு

“கர்நாடகா தேர்தல் முடிவு இந்திய அளவில் தாக்கம் ஏற்படுத்தும்!”

“கர்நாடகா தேர்தல் முடிவு இந்திய அளவில் தாக்கம் ஏற்படுத்தும்!”

கர்நாடக சட்டமன்றத்தின் தேர்தல் முடிவு இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது. இந்த தேர்தல் முடிவு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளைக் கணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கர்நாடக சட்டமன்றத்தின் தேர்தல் முடிவு மிகவும் முக்கியத்தும் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என கூறியுள்ளன.

“கர்நாடகா தேர்தல் முடிவு இந்திய அளவில் தாக்கம் ஏற்படுத்தும்!”

வாக்குப்பதிவுக்கு பிந்தையை கருத்துக்கணிப்பிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக சட்டமன்றத்தின் தேர்தல் முடிவு இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி 130 முதல் 140 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும், கடந்த ஒருமாதமாகக் கர்நாடகா முழுவதும் நாங்கள் பயணித்து இருக்கிறோம். எல்லா மக்களையும் சந்தித்துள்ளோம்.

கர்நாடக தேர்தல் முடிவுள் தேசிய அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தேர்தல் முடிவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. காங்கிரஸ் கட்சிதான் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் என தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like