1. Home
  2. தமிழ்நாடு

கோவையில் ஆச்சரியம்..! இந்த இரட்டையர்கள் வெவ்வேறு பாடப்பிரிவை எடுத்தும் பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்..!

கோவையில் ஆச்சரியம்..! இந்த இரட்டையர்கள் வெவ்வேறு பாடப்பிரிவை எடுத்தும் பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்..!

கோவை மாவட்டம் வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள வேம்பு அவென்யூவை சேர்ந்தவர்கள் சுவாமிநாதன்- ஜெயசுதா தம்பதி. இவர்களுக்கு நிரஞ்சன், நிவேதா என இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துள்ளனர். ஆனால் இருவரும் வெவ்வேறு பாடப்பிரிவை எடுத்து படித்துள்ளனர். அதன்படி நிரஞ்சன் கம்ப்யூட்டர் சயின்ஸ், நிவேதா பிசினஸ் மேக்ஸ் பிரிவும் படித்துள்ளனர். இந்த நிலையில் அண்மையில் வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் நிரஞ்சனும், நிவேதாவும், 600க்கு 530 மதிப்பெண்கள் என ஒரே மதிப்பெண் எடுத்துள்ளனர்.

கோவையில் ஆச்சரியம்..! இந்த இரட்டையர்கள் வெவ்வேறு பாடப்பிரிவை எடுத்தும் பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்..!

சிறுவயதிலிருந்தே பல விஷயங்களில் ஒற்றுமையாக இருந்தாலும், படிப்பு விஷயத்தில் இருவருக்குமே கடும் போட்டி இருந்து வந்துள்ளது. வெவ்வேறு பாடப்பிரிவுகளில் படித்தாலும், வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுத சென்றாலும் இறுதியாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்துள்ளனர். இது அவர்களது பெற்றோர் உள்பட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிள்ளைகளின் மதிப்பெண் குறித்து பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

கோவையில் ஆச்சரியம்..! இந்த இரட்டையர்கள் வெவ்வேறு பாடப்பிரிவை எடுத்தும் பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்..!

Trending News

Latest News

You May Like