சூப்பர்! அதிரடியாக குறையும் சமையல் எண்ணெய் விலை!!
சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான சுங்க வரிக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளதால், அதன் விலை அதிரடியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் சமையல் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பாமாயில் மற்றும் சூரிய காந்தி எண்ணெய் ரஷ்யா, அர்ஜென்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
அதிலும் ரஷ்யா – உக்ரைன் போருக்கு பிறகு எண்ணெய் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது.
தொடர்ந்து அதிகரித்து வரும் சமையல் எண்ணெயின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், சூரிய காந்தி மற்றும் சோயா பீன் எண்ணெய் ஆகியவற்றின் இறக்குமதிக்கான சுங்க வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது அடுத்த மாதம் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுங்க வரி விலக்கால், சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த விலக்கு ஜூன் 30ஆம் தேதி வரை தான் அமலில் இருக்கும் என்பதால், இந்த விலை குறைப்பு நீடிக்குமா என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.
newstm.in