ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
டெல்லி துணை நிலை விவகாரம் தொடர்பான வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மத்திய அரசு ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணி அதிகாரிகள் டெல்லி அரசின் அதிகார எல்லைக்குள் வருவார்களா என்ற கேள்வி எழுந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு இது தொடர்பான வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மாறுப்பட்ட கருத்தை அளித்தனர்.
நீதிபதி ஏ.கே.சிக்ரி தனது தீர்ப்பில், அரசு நிர்வாகத்தில் இணைச் செயலர் மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவை துணைநிலை ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றார்.
ஏனைய அதிகாரிகள் டெல்லி அரசின் கீழ் வருவார்கள் என்றும் தெரிவித்தார். நீதிபதி அசோக் பூஷன், நிர்வாக சேவைகள் முற்றிலும் டெல்லி அரசின் வரம்புக்கு அப்பாற்பட்டவை என்று தெரிவித்தார்.
இந்த முரண்பாடுகளை களைய, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கு சென்றது . பின்னர், 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அதில், நீதிபதி அசோக் பூஷன் கருத்தில் உடன் படவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள் சட்டம் ஒழுங்கு, காவல்துறை, நிலம் ஆகிய பொருட்பாடுகள் தவிர, அனைத்து குடியுரிமை சேவைகள் மீது சட்டங்கள் இயற்றி செயல்படுத்துவதற்கு டெல்லி அரசுக்கு அதிகாரம் இருப்பதாக தெரிவித்தனர்.
newstm.in