1. Home
  2. தமிழ்நாடு

சர்கார் பட பாணியில் வெளிநாட்டில் இருந்து ஓட்டு போட வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

சர்கார் பட பாணியில் வெளிநாட்டில் இருந்து ஓட்டு போட வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

கர்நாடக சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது.கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க வெளியூர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பலர் வந்துள்ளனர். கர்நாடகாவை சேர்ந்த அவர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்த ஆர்வத்துடன் வந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் வசித்து வந்த கர்நாடகாவை சேர்ந்த ராகவேந்திரசேத் அங்கிருந்து ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தார்.

இதற்காக அவர் 14,000 கிலோமீட்டர் பயணம் செய்து ரூ.1.50 லட்சம் செலவு செய்து வந்தார். ஆனாலும் அவர் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். ராகவேந்திரசேத்தின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. இதுபற்றி அவர் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிடப்போவதாக தெரிவித்தார்.


Trending News

Latest News

You May Like