கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு.!
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ்பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து புதிய ஆட்சி பதவி ஏற்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம், 224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டமன்றத்திற்கு மே மாதம் 10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த மார்ச் 29-ம் தேதி அறிவித்தது.
அதைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கி 20-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து 21-ம் தேதி மனுக்கள் பரிசீலனையும், 24-ம் தேதி மனுக்கள் வாபஸ் பெறுதலும் நடந்தது. அதைத்தொடர்ந்து 24-ம் தேதி மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி 224 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் போட்டியிட்டு உள்ளனர். இதில் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 209 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 209 வேட்பாளர்களும், 918 சுயேச்சைகளும் போட்டியிட்டுள்ளனர்.
நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். வாகுப்பதிவு நிறைவடைந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.இந்த தேர்தலில் சுமார் 72.67 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 72.36 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 13-ம் (சனிக்கிழமை) தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பல்வேறு ஆங்கில, கர்நாடக செய்தி நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளன. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை.
பிரபல ஆங்கில செய்திநிறுவனங்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு விவரம்: