நாளை சம்பளத்துடன் விடுமுறை..!!
நாமக்கல்லில் பணிபுரியும் கர்நாடக தொழிலாளர்களுக்கு நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா சட்டசபை பொதுத் தேர்தல் நாளை 10ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் உள்ள தொழில் மற்றும் வணிகள் நிறுவனங்களில் பணிபுரியும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாக்குரிமை உள்ள தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, கூடுதல் தலைமை செயலாளரின் உத்தரவின்படியும், சென்னை, தொழிலாளர் துறை கமிஷனர் அவரது அறிவுரையின் படியும், 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, கர்நாடக மாநிலத்தில் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறும் நாளான, நாளை 10ம் தேதி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி சுருட்டு நிறுவனங்கள், அனைத்து தனியார் மற்றும் பொது துறை நிறுவனங்களில் உள்ள நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாக்குரிமை உள்ள அனைத்து வகை தொழிலாளர்களுக்கும், நாளை 10ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த வாக்குரிமை உள்ள தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் சேலம், நீலகிரியில் கர்நாடக தொழிலாளர்களுக்கு நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது