பேராசிரியை வாட்ஸ்அப் ஹேக் செய்து கல்லூரி மாணவிகளை மிரட்டிய மர்ம நபர்..! நான் என்ன சொல்றேனோ அதை செய்யும்படி மிரட்டல்..!!
உ.பி-யில் உள்ள கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியையாக இருப்பவர் நசீம். இவரது வாட்ஸ்அப் கணக்கில் இருந்து கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு குறுஞ்செய்தி சென்று உள்ளது.அதன்பின் அந்த கணக்கில் இருந்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் செய்திகள் தொடர்ச்சியாக வந்து உள்ளன. இதுபோன்று 6-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுக்கு நடந்து உள்ளது.
இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள், பேராசிரியையிடம் சென்று, முறையிட்டனர்.இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், தனது வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டு உள்ளது என உணர்ந்து உள்ளார்.
இந்த விசயம் பற்றி அவர் சைபர் போலீசில் எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளார். அதில், தனது புகைப்படம் தவறாக பயன்படுத்தப்பட்டு, கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி சென்றதுடன், அவர்களை சிலர் மிரட்டியும் உள்ளனர் என தெரிவித்து உள்ளார். அந்த எப்.ஐ.ஆர். பதிவில், கல்லூரி மாணவிகளின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. போலியான வாட்ஸ்அப் கணக்கு ஒன்றை, கடந்த ஏப்ரல் இறுதியில் உருவாக்கி, மாணவிகளை அந்த மர்ம நபர் தொடர்பு கொண்டுள்ளார். அதன்பின், மாணவிகளின் மொபைல் போனுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணை பகிரும்படி கூறியுள்ளார். அவர்கள் எண்ணை பகிர்ந்ததும், அவர்களுடைய வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.
இதனை தொடர்ந்து, கல்லூரி மாணவிகளின் வாட்ஸ்அப் கணக்குகளில் உள்ள அனைத்து செய்திகளும் அந்த நபருக்கு கிடைத்து உள்ளன. மாணவிகளின் தனிப்பட்ட சாட்டிங்குகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்து கொண்டு, அவர்களுக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் செய்திகளை அனுப்ப தொடங்கி உள்ளார். அவர்களை மிரட்டவும் தொடங்கினார். அவர் என்ன கூறுகிறாரோ அதனை செய்யும்படி மிரட்டி உள்ளார். இல்லையென்றால் சாட்டிங் விவரங்களை வைரலாக்கி விடுவேன் என அச்சுறுத்தி உள்ளார். இதுபற்றி ஐ.டி. சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. சிம் கார்டு அடிப்படையில், அந்த மர்ம நபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.