1. Home
  2. தமிழ்நாடு

பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் சூப்பரான புது யுக்தி!!

பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் சூப்பரான புது யுக்தி!!

கர்நாடகா தேர்தலில் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் புதிய யுக்தியை கையாண்டு மக்களை கவர்கின்றனர்.

கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் ஹூப்ளியில் சோனியா காந்தி வாக்கு சேகரித்தார். கர்நாடகா பாஜக அரசு 40 சதவீத கமிஷன் அரசு என்று கூறி காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போல், பாஜக பிரிவினைவாதத்தை ஏற்படுத்துகிறது, சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்று காங்கிரஸ் மக்களிடம் எடுத்துக்கூறி பரப்புரை மேற்கொண்டு வருகிறது.


பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் சூப்பரான புது யுக்தி!!


இந்நிலையில், புதிய யுக்தியாக காங்கிரஸ், பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், தற்போதும் உள்ள அத்தியாவசிய பொருட்களின் விலையை ஒப்பிட்டு, நாளிதழில் வெளியிட்டு மக்களை கவர்ந்துள்ளது.

அதில், அனைத்து பொருட்களும் சுமார் 80 சதவீதம் விலை உயர்ந்துள்ளன. 68 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெட்ரோல், தற்போது 102 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 55 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீசல் 88 ரூபாய்க்கு தற்போது விற்கப்படுகிறது.


பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் சூப்பரான புது யுக்தி!!


அரிசி 30 ரூபாயில் இருந்து 70 ரூபாயாகவும், பருப்பு 70 ரூபாயில் இருந்து 130 ரூபாயாகவும் விலை அதிகரித்துள்ளது. கேஸ் சிலிண்டர் விலை 413 ரூபாயில் இருந்து, 1105 ரூபாயாக அதிகரித்து நடுத்தர மக்களை கடுமையாக வஞ்சித்துள்ளது.

கடலை எண்ணெய் 80 ரூபாயில் இருந்து 180 ரூபாயாகவும், சமையல் எண்ணெய் 60 ரூபாயில் இருந்து 210 ரூபாயாகவும், உளுந்து 71 ரூபாயில் இருந்து 190 ரூபாயாகவும், கொண்டை கடலை 90 ரூபாயில் இருந்து 116 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like