மாமல்லபுரம் விபத்து – நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்!!
மாமல்லபுரத்தில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு பேருந்து ஒன்று சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் ஒரு குடும்பத்தினர் சென்னை நோக்கி ஆட்டோவில் வந்துகொண்டிருந்தனர்.
அப்போது மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்த போது, பேருந்தும் -ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர், 2 குழந்தைகள், 3 பெண்கள் என ஆட்டோவில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.
ஆறு பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
newstm.in