1. Home
  2. தமிழ்நாடு

பற்றி எரியும் மணிப்பூர் – அங்கு என்ன நடக்கிறது?

பற்றி எரியும் மணிப்பூர் – அங்கு என்ன நடக்கிறது?

மணிப்பூரில் மிக மோசமான அளவுக்கு வன்முறை வெடித்துள்ளதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மெய்டேய் சமூகத்தை எஸ்.டி. பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை பல நாட்களாக அங்கு உள்ளது. ஆனால் அதற்கு பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மெய்டேய் சமூகத்தின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியினர் ஊர்வலம் நடத்தினர். மாணவர் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.


பற்றி எரியும் மணிப்பூர் – அங்கு என்ன நடக்கிறது?

டோர்பாங் பகுதியில் பழங்குடியினர் மற்றும் மெய்டேய் சமூகத்தினர் இடையே வன்முறை ஏற்பட்டது. இதை தொடர்ந்து மணிப்பூரில் எட்டு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அங்கு நிலைமை பதற்றமாகவே உள்ளது. முழு வடகிழக்கு மாநிலத்திலும் மொபைல் சேவைகள் நிறுத்தப்பட்டன. பழங்குடியினர் ஆதிக்கம் இல்லாத இம்பால் மேற்கு, கக்சிங், தவுபால், ஜிரிபாம் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.


பற்றி எரியும் மணிப்பூர் – அங்கு என்ன நடக்கிறது?

அதே போல், பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் சுராசந்த்பூர், காங்போக்பி, தெங்னௌபால் மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 4,000 பேர் பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் மணிப்பூர் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.


பற்றி எரியும் மணிப்பூர் – அங்கு என்ன நடக்கிறது?


மணிப்பூரில் நடந்த வன்முறையை தொடர்ந்து இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், எனது மாநிலமான மணிப்பூர் எரிகிறது, தயவுசெய்து உதவுங்கள் என்று டுவீட் செய்து பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



newstm.in

Trending News

Latest News

You May Like