நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!!
நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் இந்த முறை மார்ச் மாதத்திலேயே கோடை வெயிலின் தாக்கல் அதிகரித்துவிட்டது. அதனால் மக்கள் பெரும் கவலையில், அக்னி நட்சத்திரத்தை எப்படி சமாளிக்க போகிறோம் என்று புலம்பினர். இந்நிலையில் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது.
சூரியன் தனது உச்சபட்ச வெப்பத்தை தமிழ்நாட்டில் மேல் கொட்டும். நாளை தொடங்கும் அக்னி நட்சத்திரம் மே 28ஆம் தேதி வரை நீடிக்கிறது. வானிலை ஆய்வு மையங்கள், அக்னி நட்சத்திரம் என்று குறிப்பிட்டு சொல்வது இல்லை என்றாலும், இந்த காலகட்டத்தில் வெயில் மிகவும் அதிகரிக்கும் என்றே கூறுகின்றன.
இந்நிலையில் அக்னி நட்சத்திரத்தின் போது, அதிக தண்ணீர் பருக வேண்டும் எனவும் நீர் சத்து பழங்களை சாப்பிட வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சுத்தமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
அதே நேரத்தில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வெப்பத்தை தணித்துள்ளது. இதனால் மக்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர். புயல் உருவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்றும், வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே, மழை வந்து வெயிலில் இருந்து காப்பாற்றும் என்று மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
newstm.in