நடிகர் மனோபாலா மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!! சமீபத்தில் என்னை பாராட்டியது நெஞ்சில் நிழலாடுகிறது..!
நடிகரும் இயக்குநருமான மனோ பாலா கல்லிரல் பிரச்னை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 15 நாட்களாக உடல் நலிவுற்று வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
இந்நிலையில் நடிகர் மனோபாலா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான திரு. மனோபாலாஅவர்கள் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும்அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
சமீபத்தில் என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு அவர் பாராட்டி பேசியது இந்தத் தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது. திரு. மனோபாலாவின் மறைவால் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.