மத்திய அரசு அதிரடி… நாடு முழுவதும் தடை!!
ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளுக்கு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்தது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை விதித்து சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு அனுமதி அளித்தது.
தற்போது திமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் மூலம் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் அரங்கேறி வரும் நிலையில், பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தற்போது அமலில் உள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை எந்த விதத்திலும் ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டங்கள் சமூக சிக்கல்களையும், நிதி பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறத்து என்று மத்திய அரசுதெரிவித்துள்ளது.
இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஆன்லைன் சூதாட்டங்கள் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. எனவே ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன.
newstm.in