சென்னையில் அடுத்தடுத்து இருவர் கொலை!!
சென்னை திருவொற்றியூரில் இரண்டு பேர் அடுத்தடுத்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த மனோஜ் (24) என்பவரும், எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த கோழி செல்வம் (32) என்பவரும் கடைக்கு மதுபானம் அருந்து சென்றுள்ளனர்.
அப்போது இருவரும் கையில் கத்தியை வைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் குத்திவிடுவதாக விளையாடி உள்ளனர். அப்போது, கோழி செல்வம் மனோஜை கத்தியால் குத்தினார். அதைப்பார்த்து அருகில் இருந்து 55 வயது நபர் சத்தம் போட்டுள்ளார்.-
இதையடுத்து, கோழி செல்வம் அந்த நபரையும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இரண்டு கொலை செய்த கோழி செல்வத்தை போலீஸார் கைது செய்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in