1. Home
  2. தமிழ்நாடு

அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி அறிவிப்பு!!

அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி அறிவிப்பு!!

இந்த ஆண்டு கோடை காலத்திற்கான அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்த முறை மார்ச் மாதத்திலேயே கோடை வெயிலின் தாக்கல் அதிகரித்துவிட்டது. அதனால் மக்கள் பெரும் கவலையில், அக்னி நட்சத்திரத்தை எப்படி சமாளிக்க போகிறோம் என்று புலம்பினர்.

இந்நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வெப்பத்தை தணித்துள்ளது. இதனால் மக்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.


அக்னி நட்சத்திரம் தொடங்கும் தேதி அறிவிப்பு!!

அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்றும், வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வரும் 4ஆம் தேதி, அதாவது வெள்ளிக்கிழமை அக்னி நட்சத்திரம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியன் தனது உச்சபட்ச வெப்பத்தை தமிழ்நாட்டில் மேல் கொட்டும்.

மே 4ஆம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம் மே 28 ஆம் தேதி வரை நீடிக்கிறது. வானிலை ஆய்வு மையங்கள், அக்னி நட்சத்திரம் என்று குறிப்பிட்டு சொல்வது இல்லை என்றாலும், இந்த காலகட்டத்தில் வெயில் மிகவும் அதிகரிக்கும் என்றே கூறுகின்றன.

newstm.in

Trending News

Latest News

You May Like