அஜித் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு செம ட்ரீட்!!
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான ‘துணிவு’ திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வசூல் ரீதியாக 260 கோடிக்கு மேல் அள்ளி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து வெற்றிக்கு பின்னர் நடிகர் அஜித்தின் ஏகே 62 படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது.
படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் அப்படத்தின் கதை பிடிக்காததால் அதில் இருந்து விக்னேஷ் சிவனை அதிரடியாக நீக்கியது லைகா நிறுவனம். அதனையடுத்து, அவரது படம் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்துவந்தது. அஜித் ரசிகர்கள் பட அறிவிப்பு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்தனர்.
அஜித் தற்போது தன்னுடைய உலக பைக் பயணத்திற்காக நேபாளில் உள்ளார். ஆனால் அவர் தன்னுடைய பிறந்தநாளில் ரசிகர்களுக்கு 62-வது படத்தின் அப்டேட் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதை படக்குழுவினருக்கு அறிவுறுத்திவிட்டார். இதனால் ஏகே 62 படத்தின் தலைப்பு முதல் பார்வையுடன் அவரது பிறந்தநாளுக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வந்தது.
அதனையடுத்து, அஜித் ரசிகர்கள் அதனை கொண்டாடிவந்தனர். லைகா நிறுவனம் அறிவிப்பை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும் நேரம் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில், படத்தின் டைட்டிலை லைகா நிறுவனம் வெளியிட்டது. படத்தின் இயக்குநரையும் உறுதிசெய்துள்ளது.
அதன்படி, லைகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் பெயர் விடா முயற்சி என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.