என் பொண்ணோட வாழ்க்கையை நீ தானே சீரழிச்ச.. முன்னாள் காதலனை வெட்டி கொன்ற பெண்ணின் பெற்றோர்!!
தெலுங்கானா மாநிலம் மஞ்சூரியாலா பகுதியில் வசித்து வந்தவர் மகேஷ் (24). இவர் இளம் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனை மகேஷ் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்து இருந்தார்.
இந்த நிலையில் மகேஷுக்கும் அந்த இளம் பெண்ணுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த இளம் பெண் காதலுடனான தொடர்பைத் துண்டித்துள்ளார். அதனை ஏற்றுக் கொள்ளாத மகேஷ், தன்னை காதலிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கிடையே அந்த இளம் பெண்ணின் பெற்றோர் அவருக்கு வேறொரு இளைஞர் உடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனால் மிகவும் கோபம் அடைந்த மகேஷ், அந்த இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை அவரது கணவருக்கு அனுப்பி வைத்துள்ளார். தனது மனைவி காதலனுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை பார்த்த இளைஞர் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து மகேஷ் அந்த இளம் பெண்ணை விடவில்லை. விரட்டி விரட்டி தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டுமெனத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து அந்த இளம் பெண் தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுத்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தினர் மகேஷுக்கு போன் செய்து குறிப்பிட்ட இடத்திற்கு வர வேண்டுமென அழைத்துள்ளனர். அந்த இடத்திற்கு வந்த அவரிடம் இளம்பெண்ணின் பெற்றோர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தை முற்றிப் போனதால் இளம்பெண்ணின் பெற்றோர் நடு ரோட்டிலேயே மகேஷை வெட்டி கொலை செய்துள்ளனர். சம்பவ இடத்திலேயே மகேஷ் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மகேஷ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.