வந்தது சம்பள உயர்வு!!
நிதியாண்டு முடிந்து முதல் மாத சம்பளம் என்பதால் பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள் உயர்வுடன் கூடிய சம்பளத்தை பெற்றுள்ளனர்.
இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்களில் ஆண்டுதோறும் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. மார்ச் மாதம் நிதியாண்டு முடிந்த உடன், ஏப்ரல் மாதம் மறுமதிப்பீடு செய்யப்பட்டு சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது.
அந்த வகையில் கடந்த மாதம் மார்ச் நிதியாண்டு முடிந்த நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை பலரும் கடந்த வெள்ளிக்கிழமையே பெற்றுவிட்டனர். இந்நிலையில் பலருக்கும் சம்பள உயர்வுடன் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
பல ஊழியர்கள் உயர்ந்த சம்பள தொகையை பெற்றுள்ள நிலையில், சில நிறுவனங்கள் அடுத்த மாதம் அரியர் தொகையுடன் ஊதியத்தை வழங்க உள்ளன.
newstm.in