1. Home
  2. சினிமா

குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சுமன்..!!

குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சுமன்..!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சுமன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர்.

கோயிலுக்கு வெளியே வந்த சுமன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் திரைப்படத்துறையில் 10 மொழிகளில் நடித்து 45 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து குடும்பத்தினர், நண்பர்களுடன் சுவாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துக் கொண்டு பிஸியாக உள்ளேன். கொரோனா பேரிடர் காலத்தில் தங்களது உயிரை பணயம் வைத்து பணிபுரிந்த ராணுவத்தினர், போலீசார், விவசாயிகள், மருத்துவர்கள் என அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சுமன்..!!

இது போன்ற பேரிடரில் இருந்து நாம் பிழைத்திருக்கிறோம் இனி வரும் காலங்களில் அனைவரும் ஒன்றாக இருந்து செயல்பட வேண்டும். தேர்தலின் போது அரசியல் பயணம் குறித்து முழு விளக்கம் அளிப்பேன். பா.ஜ.க.வில் இருந்து வெளியே வந்துவிட்டேன் மீண்டும் பாஜகவில் செல்லும் வாய்ப்பில்லை.

தெலுங்கானா மாநில பிரிவினையின் போது மாநிலம் பிரிந்தால் தான் வளர்ச்சி இருக்கும் என பிஆர்எஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தேன். மேலும் தெலங்கானா முழுவமையாக வளர்ச்சி பெற 5 ஆண்டுகள் ஆகும்.

அந்தந்த பகுதியில் உள்ளவர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்லாமல் அவர்கள் உள்ள இடத்திலேயே வேலைவாய்ப்பு ஏற்படும் விதமாக செய்ய வேண்டும். ஆந்திராவில் பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.) சென்செக்ஸ் செய்ய முதல்வர் ஜெகன் மோகன் முடிவு எடுத்தது நல்ல வரவேற்கத்தக்கது. இதுவரை யாரும் செய்யவில்லை தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவு வரவேற்கதக்கது என்றார்.

Trending News

Latest News

You May Like