ட்விட்டரில் இருந்து வெளியேறிய சிவகார்த்திகேயன்..!!
சின்னத்திரையிலிருந்து வந்து தற்போது வெள்ளித்திரையில் தடம் பதித்து ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாம் பெரும்பாலான குழந்தைகளால் ரசிக்கப்படுகிறது, இவரது நகைச்சுவையான பேச்சிற்கே பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படம் வெளியாகவுள்ளது. 'மண்டேலா' படத்தின் மூலம் பிரபலமான மடோன் அஷ்வின் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார்.
இந்த படம் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்தநிலையில் சிவகார்த்திகேயன் டுவிட்டர் பதிவில், என் அன்பு சகோதர சகோதரிகளே, டுவிட்டரில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளேன். நான் விரைவில் திரும்பி வருவேன், பத்திரமாக இருங்கள். என் படம் குறித்த அப்டேட்களை என் குழுவினர் இங்கு பதிவிடுவார்கள் என பதிவிட்டுள்ளார்.